கொல்லூர் சென்ற முதல்வர் விஜய்… என்ன காரணம்?

Spread the love

தமிழக முதல்வர் விஜய், கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தின், பிரசித்தி பெற்ற கொல்லுார் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று வழிபட்டார்.

உடுப்பி மாவட்டம், பைந்துார் தாலுகாவில் உள்ள கொல்லுார் மூகாம்பிகை கோவில், பிரசித்தி பெற்றது. அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் என, பலரும் இந்த கோயிலுக்கு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.  தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., தாய் மூகாம்பிகையின் தீவிர பக்தர். இந்த கோயிலுக்கு தங்கவாள் காணிக்கையாக வழங்கியுள்ளார். தமிகத்தின்  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் மூகாம்பிகை அம்மனின் தீவிர பக்தர். கடந்த 2005ம் ஆண்டு சசிகலாவுடன் கொல்லூர் சென்று தரிசனம் செய்துள்ளார்.

தேர்தல் முடிவுக்கு பிறகு , தமிழக முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்காவும், கொல்லுாருக்கு வந்து, மூகாம்பிகையை வழிபட்டார். இந்நிலையில், தமிழக புதிய முதல்வர் விஜய், இந்த கோயிலுக்க்கு நாளை செல்கிறார். முதல்வரான பிறகு, முதன் முறையாக கர்நாடகாவுக்கு செல்லவுள்ளார். டில்லியில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள முதல்வர்  விஜய் அங்கிருந்து நாளை மதியம் 12:30 மணிக்கு, சிறப்பு விமானம் மூலம், மங்களூரு விமான நிலையம் சென்றார். பின்னர், சாலை மார்க்கமாக கொல்லுார் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று, தரிசனம் செய்தார்.

கோவிவில் நடக்கும் சிறப்பு பூஜைகளில் முதலவர் விஜய் கலந்து கொண்டார். தொடர்ந்து, மங்களூரு விமான நிலையத்துக்கு திரும்பி, சிறப்பு விமானத்தில் சென்னைக்கு வந்தடைந்தார்.

இந்த கோவிலுள்ள மூலவர் சுயம்பு லிங்கத்தில், சிவசக்தி அம்சங்களான துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூவரும் சேர்ந்து அருள்பாலிக்கின்றனர். எனவே, மூகாம்பிகையை  வணங்குவது அனைத்து தெய்வங்களையும் வணங்கிய பலனைத் தரும்.கொல்லூர் மூகாம்பிகை கோயில் குடசாத்ரி மலையின் அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ காணப்படும். மங்களூரிலிருந்து 150 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள இந்த ஆலயம் சௌபர்ணிகையாற்றின் கரையோரமாக அமைந்துள்ளது. மூகாம்பிகையை வணங்கித் தொடங்கும் எந்தச் செயலும் தடையின்றி நிறைவேறும். சகல வியாதிகளுக்கும் தீரும் என்பது நம்பிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *