கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

Spread the love

பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மாவட்ட டாஸ்மாக் அனைத்து சங்க கூட்டு குழுவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீண்ட காலமாக டாஸ்மாக் கடைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் 50-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் கலந்து கொண்டு முழக்கங்கள் எழுப்பி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தங்களது நீண்ட நாள் கோரிக்கைகள் குறித்து தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.