ஸ்டாலினை சந்தித்தார் முதல்வர் விஜய்

Spread the love

விஜய் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு இன்று நேரில் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

முதல்வர் விஜய்யை, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீட்டு வாசலில் ஆரத்தழுவி வரவேற்று உள்ளே அழைத்து சென்றார். தொடர்ந்து அன்பில் மகேஷ், எழிலன் நாகநாதன் உள்ளிட்டோரும் விஜய்யை வரவேற்றனர்.

பின்னர் மு.க.ஸ்டாலின், முதல்வர் விஜய்க்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினார். இரு தலைவர்களும் சில நேரம் அரசியல் மற்றும் பொதுநல விவகாரங்கள் குறித்து கலந்துரையாடியதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானதாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், தமிழக அரசியல் வட்டாரங்களில் இந்த சந்திப்பு முக்கியத்துவத்துடன் பார்க்கப்படுகிறது.

இந்த சந்திப்பின்போது அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சேகர்பாபு, சக்கரபாணி, ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *