தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில், அரசியல் சூழல் பரபரப்பாக உள்ளது. பல்வேறு தேர்தல் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மீண்டும் ஆட்சியைத் தொடரும் என்றும், சில கணிப்புகள் தொங்கு சட்டப்பேரவை உருவாகும் என்றும் கூறி வருகின்றன.
இந்த நிலையில், தமிழக அமைச்சர் சேகர்பாபு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருடன் அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமாரும் கலந்து கொண்டார்.
கோயிலில் தேவஸ்தான அதிகாரிகள் இருவரையும் வரவேற்று சாமி தரிசனம் செய்து வைத்தனர். பின்னர் ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து வேத பண்டிதர்கள் மூலம் வேத ஆசீர்வாதமும் வழங்கப்பட்டது.



Leave a Reply