குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் கட்டிடப் பொறியியல் துறையில் பயிலும் 140 மாணவர்களுக்கு, நில மேலாண்மை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் நில ஆவணங்கள் மேலாண்மை குறித்த மூன்று நாள் பயிலரங்கம் நடத்தப்பட்டது.
இந்தப் பயில ரங்கத்தின் இரண்டாம் நாள் நிகழ்வாக, மாணவர்களுக்கு பொள்ளாச்சி சாலையில் கிணத்துக்கடவு கிராமத்தில் அமைந்துள்ள சிறு குன்றின் மேல் உள்ள அருள்மிகு வேலாயுத சுவாமி கோயில் வளாகத்தில் களப்பணி பயிற்சி வழங்கப்பட்டது.
அங்கு, இந்திய நில அளவைத் துறையால் நிறுவப்பட்ட தேசிய கோண நிலையம் மற்றும் நவீன தொழில்நுட்பத்தில் செயல்படும் தொடர்ச்சியான செயற்பாட்டு குறிப்பு நிலையம் (சி.ஓ.ஆர்.எஸ்.) கருவிகள் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன.
மேலும், மூன்று கிராமங்கள் சந்திக்கும் மையப் புள்ளியில் அமைந்துள்ள நில அளவை கற்களும் பார்வையிடப்பட்டன.
நிகழ்வில், நில மேலாண்மை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் எஸ்.எஸ். மணிசேகரன் தலைமையில், ஓய்வு பெற்ற உதவி இயக்குநர் வே. முத்துராஜா, தொழில்நுட்ப மேலாளர் பி.வி. குமாரவேல், சிறப்பு விருந்தினராக அகில இந்திய நிலவள மேம்பாட்டு கூட்டமைப்பின் தேசிய செயல் செயலாளர் லயன் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், கல்லூரியின் கட்டிடப் பொறியியல் துறை உதவி பேராசிரியர்கள் விஸ்வநாத், அனிதா மற்றும் அஸ்வின் ஆகியோரும் பங்கேற்றனர்.
இந்த களப்பணி பயிற்சியின் மூலம், இந்திய வரைபடம் தயாரிப்பதற்கான அடிப்படை நில அளவை முறைகள் மற்றும் தற்போதைய நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நில அளவைப் பணிகளை மேற்கொள்ளும் நடைமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விரிவான பயிற்சி அளிக்கப்பட்டது.
கட்டிடப் பொறியியல் மாணவர்களுக்கு நில ஆவணங்கள் மற்றும் நில அளவை மேலாண்மை பயிற்சி



Leave a Reply