மெட்ராஸ் மாடர்ன் டூரிஸம் – கோவை கிளை முதல் ஆண்டு விழா கொண்டாட்டம்

Spread the love

துபாயில் கடந்த மூன்று ஆண்டுகளாக சுற்றுலா துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் மெட்ராஸ் மாடர்ன் டூரிஸம் நிறுவனம், கோவை செல்வபுரம் பகுதியில் தொடங்கிய தனது கிளையின் முதல் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடியது.

விழாவில் சிறப்பு விருந்தினராக சின்னத்திரை நட்சத்திரம் புகழ் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து கேக் வெட்டி, ஒரு ஆண்டுக் காலமாக நிறுவனத்திற்கு ஆதரவாக இருந்த வாடிக்கையாளர்களுக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த நிறுவன உரிமையாளர் ராஜேஸ்வரி பெருமாள் கூறுகையில், “சர்வதேச மற்றும் உள்நாட்டு டூர் பேக்கேஜ்கள், குடும்ப மற்றும் குழு சுற்றுலா திட்டங்கள், உலகளாவிய விசா சேவைகள், விமானம், பஸ், ரயில் டிக்கெட் முன்பதிவு, டிராவல் இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை ஒரே இடத்தில் வழங்கி வருகிறோம். எங்கள் நிறுவனம் மூலம் இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் வெளிநாட்டு சுற்றுலாவுக்கும், ஆயிரக்கணக்கானோர் உள்நாட்டு சுற்றுலாவுக்கும் சென்று திருப்தியுடன் திரும்பியுள்ளனர். அந்த வாடிக்கையாளர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சியாகவே இந்த விழா நடத்தப்படுகிறது,” என்றார்.

பின்னர் பேசிய நடிகர் புகழ், “நான் செல்லும் அனைத்து பயணங்களுக்கும் இந்த நிறுவனத்தின் சேவையையே பயன்படுத்துகிறேன். பொதுமக்களும் ஆதரவு அளிக்க வேண்டும்,” என்றார்.

மேலும், “இன்றைக்கு குறைந்த பட்ஜெட்டில் ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன. இதனால் சினிமா துறைக்கு புதிய வளர்ச்சி கிடைத்துள்ளது. பல திறமைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. சிறிய படங்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பது என் நீண்ட நாள் விருப்பம். சினிமா என் உயிர்,” என்றும் அவர் தெரிவித்தார்.