குடியரசு தினத்தை முன்னிட்டு, பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 3242 சி பிராந்தியத்தின் பொள்ளாச்சி லயன்ஸ் சங்கம் மற்றும் ஈரோடு ஜீவன் ஜோதித் டிரஸ்ட் இணைந்து, கால்களை இழந்தவர்களுக்கு இலவச செயற்கைக் காலும் செயற்கைக் கையும் வழங்கும் சிறப்பு சேவை நிகழ்வை என்.ஜி.எம் கல்லூரியில் நடத்தியது.
இந்நிகழ்வு மாவட்ட ஆளுநர் பிஎம்ஜிஎஃப் ஏ. ராஜசேகர் தலைமையில், பொள்ளாச்சி லயன்ஸ் சங்கத் தலைவர் பிஎம்ஜிஎஃப் நாகராஜ் ஒருங்கிணைப்பில் சிறப்பாக நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்களாக இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் மாவட்ட ஆளுநருமான பிஎம்ஜிஎஃப் டாக்டர் பழனிசாமி, முதல் துணை ஆளுநர் பிஎம்ஜிஎஃப் பி.எஸ். செல்வராஜ், இரண்டாம் துணை ஆளுநர் சூரி நந்தகோபால், ஜிஎஸ்டி ஒருங்கிணைப்பாளர் லயன் செந்தில் குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லயன் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களிலிருந்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு இலவசமாக செயற்கைக் கால் மற்றும் கை வழங்கப்பட்டது. இதன்மூலம் உடல் தளர்வுற்றவர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் சுயநினைவோடு வாழ்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நிகழ்வை சிறப்பாக நடத்துவதில் மாவட்ட அமைச்சரவை செயலாளர் ராஜா சுந்தரம், பொருளாளர் சி.பி. ரமேஷ்குமார், மண்டல தலைவர் மணி, மாவட்டத் தலைவர் விழிகள் காமராஜ், சங்க செயலாளர் விஜயகுமார், பொருளாளர் திருமலைசாமி, தங்கராஜ், நாட்ராயன், பிரவீன், கீர்த்தி, அருணாதேவி, சோமண்ணா, சண்முகம், தர்மராஜ், தனபால், கனகராஜ் ஆகியோர் பங்களித்தனர்.
இலவச செயற்கைக் கால் மற்றும் கை வழங்கும் இந்த சேவை நிகழ்வு கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
பொள்ளாச்சி லயன்ஸ் சங்கம் இதன்மூலம் பலரின் வாழ்க்கையில் புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.
பொள்ளாச்சி லயன்ஸ் சங்கம் சார்பில் இலவச செயற்கை கை-கால் வழங்கும் விழா



Leave a Reply