கோவை ராயல் கேர் சூப்பர் சிறப்பு மருத்துவமனையில் 72 வயது முதியவருக்கு தலைகீழ் தோள்பட்டை மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு, அவருக்கு மறுவாழ்வு வழங்கப்பட்டுள்ளது.
7 மாதங்களாக கடுமையான தோள்பட்டை வலி மற்றும் கையின் இயக்கக் குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நோயாளியின் தோள் பட்டை தசைநார் முற்றிலும் சேதமடைந்தது பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அவரின் வயது மற்றும் தசைநார் நிலையைப் பொருத்து தலைகீழ் தோள்பட்டை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
இந்த சவாலான அறுவைச் சிகிச்சை மூட்டு மாற்று மற்றும் நுண்துளை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தினேஷ் சிதம்பரம் தலைமையிலான மருத்துவக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து டாக்டர் தினேஷ் சிதம்பரம் கூறுகையில், “இந்தச் அறுவை சிகிச்சை அவருக்கு ஒரு மறுவாழ்வை அளித்து ள்ளது. அவர் மீண்டும் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக அன்றாட வேலைகளைச் செய்வதைப் பார்ப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்,” என்றார்.
மருத்துவமனையின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான டாக்டர் க. மாதேஸ்வரன் கூறுகையில், “இந்த நவீன மருத்துவத் தொழில்நுட்பம் முதியவர்கள் மற்றும் நீண்டகாலத் தோள்பட்டை வலி முடக்கம் உள்ள நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த தீர்வாகும்,” என்றார்.
மருத்துவமனையில் இயங்கும் புனர்வாழ்வு துறை, அறுவைச் சிகிச்சைக்குப் பின் நவீன உபகரணங்களும் அனுபவம் வாய்ந்த மருத்துவர்களும் இணைந்து நோயாளிகளின் இயக்கத்திறனை மீட்டெடுக்க உதவி செய்து வருகிறது.
தோள்பட்டையின் இயல்பான அமைப்பில் பந்து எலும்புப் பகுதியில் மற்றும் குழி தோள்பட்டை பகுதியில் அமைந்துள்ளது. தலைகீழ் தோள்பட்டை மாற்றில், இந்த அமைப்பு மாற்றப்பட்டுள்ளது; அதாவது பந்து தோள்பட்டையில் பொருத்தப்பட்டு குழி கை எலும்பில் பொருத்தப் படுகிறது.
இதனால் தசைநார் செயலிழந்த நிலையிலும் டெல்டாய்ட் தசை தோள்பட்டை இயக்க உதவுகிறது.வயதானோர், தசைநார் பெரிய கிழிவு, பழைய சிகிச்சை தோல்வி மற்றும் முறிவு போன்ற நிலைகளில் இந்தத் தொழில்நுட்பம் அதிகம் பயன் அளிக்கிறது.
72 வயது முதியவருக்கு தோள்பட்டை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை ராயல் கேர் மருத்துவமனை சாதனை



Leave a Reply