திமுக என்றால் CMC — க்ரைம், மாஃபியா, கரப்ஷன் – பிரதமர் நரேந்திர மோடி கண்டனம்

Spread the love

மதுராந்தகத்தில் நடைபெற்ற என்டிஏ பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். உரையின் தொடக்கத்தில் “தமிழகத்தின் சகோதர, சகோதரிகளே வணக்கம்” என தமிழில் கூறிய அவர், வீரமும் நாட்டுப்பற்றும் தமிழக மக்களின் நாடி, நரம்புகளில் ஓடுகிறது என்று பாராட்டினார்.

சுதந்திரப் போராட்டத்தில் தமிழக வீரர்கள் சுபாஷ் சந்திர போஸ் உடன் இணைந்து போராடியதை நினைவுகூறிய பிரதமர், தமிழகத்தின் வரலாற்று பெருமையை எடுத்துரைத்தார்.

அதே நேரத்தில், திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்த பிரதமர், “ஊழலில் திளைக்கும் திமுக அரசுக்கான கவுன்ட் டவுன் தொடங்கி விட்டது” என்றும், “திமுக என்றால் CMC — க்ரைம், மாஃபியா, கரப்ஷன்” என்றும் சாடினார். தமிழ்நாட்டில் ஜனநாயகமும் நம்பகத்தன்மையும் இல்லாமல், ஒரே குடும்பத்துக்காக ஆட்சி நடைபெறுகிறது என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார்.

NDA ஆட்சி அமைந்தால், தமிழகத்தில் ஊழலற்ற நிர்வாகம் அமையும் என்றும், அரசின் பின்தங்கிய வளர்ச்சியும் சரிசெய்யப்படும் என்றும் அவர் கூறினார். மேலும், NDA தலைமையிலான மத்திய அரசு 11 ஆண்டுகளில் தமிழகத்திற்காக வரலாறு காணாத பணிகளை செய்ததாகவும், மீனவர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல துறைகளுக்கு பலமான ஆதரவுகளை வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

இரட்டை இன்ஜின் அரசு அமைந்தால், “போதையில்லா தமிழகம்” உருவாகும் என்றும், தமிழ்நாட்டின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *