காரமடை அருகே திம்மம்பாளையம் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள சமூக கூடத்தில், மேட்டுப்பாளையம் ரயில்வே போலீசார் பெண்கள் மற்றும் குழந்தைகளை நோக்கி கல்வி மற்றும் இன்றைய சமூகச் சவால்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.
நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் ரயில்வே சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்து உரையாற்றினார். குழந்தைகள் பாதுகாப்பில் முன்கூட்டியே புகார் அளிப்பதன் அவசியம் மற்றும் சமூகப் பொறுப்பு குறித்து விளக்கும்விதமாக அவர் பேசினார்.
சட்ட விழிப்புணர்வு அமர்வில் மேட்டுப்பாளையம் வழக்கறிஞர் கள் சங்கத்தின் முன்னாள் செயலாளர் ஜீவராஜ் மற்றும் கோவை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் மகேஸ்வரி கலந்து கொண்டு, அடிப்படைச் சட்டங்கள், பெண்களின் உரிமைகள் மற்றும் நீதிக்கான அணுகல் போன்ற தலைப்புகளில் விளக்கமளித்தனர்
கெமியா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் பமிலா பேசுகையில், “பெற்றோர்கள் குழந்தைகளுடன் நேரம் செலவிடவில்லை என்றால், அவர்கள் செயலிகளில் நேரம் செலவிடுகின்றனர்; இதனால் படிப்பு பாதிக்கப்படுகிறது,” என்றார். இந்நிகழ்ச்சியில் திம்மம்பாளையம் பகுதி மக்கள் பலரும் பங்கேற்றனர்.
காரமடை அருகே கல்வி மற்றும் சமூக சவால்கள் குறித்த விழிப்புணர்வு



Leave a Reply