செளடேஸ்வரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் திருவிழா

Spread the love

கோவை ஸ்ரீ சௌடேஸ்வரி அறக்கட்டளை நடத்தும் ஸ்ரீ சௌடேஸ்வரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் திருவிழா அறக்கட்டளையின் தலைவரும் பள்ளியின் தாளாளருமான சீனிவாசன் தலைமையில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த பொங்கல் விழாவானது முன்னோர்கள் கிராமத்தில் கொண்டாடுவது போல் சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
விழாவின் முதல் நிகழ்ச்சியாக பொங்கல் வைத்து சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வழிபட்டனர்.
அதனைத்தொடர்ந்து பாண்டியாட்டம், பச்சகுதிரை , பரமபதம், பல்லாங்குழி, ஐந்துகல்லாட்டம், தொட்டு விளை யாட்டு,கண்ணாமூச்சி, சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு செயலாளர் ரவிராஜ் கிருஷ்ணன், பொருளாளர் சண்முகம், துணைத் தலைவர்கள் சுப்பிரமணியன் செல்வராஜ், இணைச்செயலாளர்கள் ரபீந்திரநாத் , மோகன் மற்றும்
எம்ஜேஎஃப் சுபா சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சி குறித்து தலைவர் சீனிவாசன் கூறுகையில் எங்களது பள்ளி ஆனது 50 ஆம் ஆண்டு பொன்விழாவை நோக்கி செயல்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது எங்களது பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா கொண்டாடுவது வழக்கமாக கொண்டுள்ளோம்.
அதனை தொடர்ந்து இந்த ஆண்டும் ஒரு கிராமத்தை கண்முன் நிறுத்துவது போல் சிறப்பாக அமைக்கப்பட்டு குழந்தைகளுக்கான அனைத்து விளையாட்டு போட்டிகளும் நடந்து வருகின்றன.
மேலும் எங்களது அறக்கட்டளையின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் 250க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகின்றோம்.
எங்களது பள்ளி சிறப்பாக கல்வியளிப்பதில் தேசிய மற்றும் இன்டர்நேஷனல் அளவிலான சான்றிதழ்களை பெற்றுள்ளது இந்த பொங்கல் விழாவினை சிறப்பாக ஏற்பாடுகள் செய்த பள்ளி நிர்வாகத்திற்கும் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்திருந்தனர் என்பதை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.