ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை தனது 50-வது ஆண்டு பொன்விழாவையும், ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவமனை தனது 25-வது ஆண்டு வெள்ளி விழாவையும் வரும் ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடுகிறது
இது குறித்து எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை, கோவை யில் 1970 ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது. மனிதம் போற்றும் மருத்துவம். அதுவே அறத்தின் மகத்துவம் எனும் சிந்தனையோடும், குறைந்த செலவில் தரமான மருத்துவம் எனும் சீரிய நோக்கத்தோடும், 1975 ஆம் ஆண்டு 18 ஏக்கர் பரப்பளவில் நகரின் மையப் பகுதியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவ மனை துவங்கப்பட்டது.
கோயம்புத்தூரில் முதல் சி.டி. ஸ்கேன், மருத்துவத் துறையின் அதிநவீன உபகரணங்கள், மருத்துவத்தின் சிறப்புத் துறைகளை உருவாக்குதல், மேம்பட்ட இதய சிகிச்சை என்று சாதனைகளின் தோற்றுவாயாக உருவானது ஸ்ரீ ராமகிருஷ்ணா பன்னோக்கு மருத்து வனை.
1990–ல் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்னும் முதல் வெற்றியைப் பதித்தது. 2005 இந்தியாவின் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வருகை புரிந்தார். புற்று நோய்க்கான சிறப்பு சிகிச்சை துறை அப்போது தொடங்கப்பட்டது.
2015 ஆம் ஆண்டு சுமார் 250 கோடி ரூபாய் செலவில் உலகத்தரம் மேம்படுத்தப்பட்ட பன்னோக்கு சிறப்பு சிகிச்சை மையம் கட்டமைக்கப்பட்டது. தரமான உள்கட்டமைப்பு, 1000 படுக்கைள், மேம்பட்ட தொழில்நுட்ப திறன்களைக் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU), 16 அறுவை சிகிச்சை அறைகள், அவசர மற்றும் இதய நோய் சிகிச்சை மையங்கள், மாற்று அறுவை சிகிச்சைப் பிரிவுகள் என்று மருத்துவத்துறையில் தன்னிகரற்ற மருத்துவ மனையாக உருவெடுத்தது ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை.
2016 இல் 8 மணி நேரத்தில் 13,206 நபர்கள் தங்கள் உடல் உறுப்பு தான ஒப்புதல் படிவங்களை நிரப்பி மாபெரும் உலக சாதனை ஒன்றினை நிகழ்த்தி “கின்னஸ் வேர்ல்ட் ஆப் ரெக்கார்ட்” புத்தகத்தில், சரித்திர நிகழ்வைப் பதித்தது. உலகத்தரம் வாய்ந்த மருத்துவ முன்னேற்றங்களை மக்களுக்கு அறிமுகம் செய்வதில் முன் னோடியாக திகழ் கின்றது ஸ்ரீ ராமகிருஷ்ணா பன்னோக்கு மருத்துவ மனை.
ஸ்ரீ ராமகிருஷ்ணா பன்னோக்கு மருத்துவமனையின் இந்த 50 ஆண்டு காலப் பயணமானது, ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், செவிலி யர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என்று ஒவ்வொருவரின் அர்ப்பணிப்பால் சாத்திய மானது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை 50 ஆண்டுகளைக் கடக்கும் இதே தருணத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவமனை 25 ஆண்டுகளை நிறைவு செய்கின்றது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவமனை தேசிய மற்றும் சர்வதேச அளவில் தனது தடத்தினைப் பதித்துள்ளது. அதிநவீன ஆய்வகங்கள், கிளினிக்குகள், ஸ்மைல் டிசைன் என்று முன்னோடி தொழில்நுட்பங்களைக் கொண்டு விளங்குகின்றது. மிகுந்த அனுவம் பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்படுவதால் இன்று கடல் கடந்தும் பயணிக்கும் பல்வேறு பல் மருத்துவர்களை உருவாக்கிக் கொண்டி ருக்கின்றது.மிகுந்த குறைந்த கட்டணத்தில் ஏராளமான பொதுமக்கள் இங்கு பயனடைந்து வருகின்றனர்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா பன்னோக்கு மருத்து வமனையின் 50 ஆவது ஆண்டு பொன்விழா, ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவமனையின் 25-வது ஆண்டு வெள்ளிவிழா கோவை அவினாசி சாலையில் உள்ள கொடிசியா வர்த்த வளாகத்தில் வரும் ஜனவரி 15 ஆம் தேதி, மாலை 5 மணிக்கு கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது.
இந்தியக் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். அரசியல் தலைவர்கள், அரசு உயரதிகாரிகள், தொழிலதிபர்கள் கலந்து கொள்கின்றனர்.” என்று எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் கூறினார்.
பேட்டியின் போது, எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன் சௌந்திரராஜ், தலைமை நிர்வாக அதிகாரி டி. மகேஷ்குமார், இராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவ இயக்குநர் டாக்டர் எஸ். அழகப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.
ஜனவரி 15 ல் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை 50 வது ஆண்டு பொன்விழா, ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவமனை 25 வது ஆண்டு வெள்ளிவிழா



Leave a Reply