விஜய்யின் ஜனநாயகன் பட சர்ச்சையில் சென்சார் போர்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளதற்கு காங்கிரஸ் எம்.பிக்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் தரவில்லை சென்சார் போர்டு. இது தொடர்பான வழக்கில் ஜனநாயகன் படத்துக்கு சான்றிதழ் வழங்க சென்சார் போர்டுக்கு சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் உடனே மேல்முறையீடு செய்து தடை பெற்றுள்ளது சென்சார் போர்டு.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், “ #CBI, #ED, #IT வரிசையில் சென்சார் போர்டும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது. கடுமையான கண்டனங்கள் என தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனை வரவேற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி எம்.பி, “ ஸ்டாலின் கருத்தை வரவேற்கிறேன். தமிழ்நாட்டின் மீது பாஜக நடத்துகிற எந்தவொரு தாக்குதலையும் நம் அரசியல் சார்புகளை,நம் கட்சிகளின் எல்லைகளைத் தாண்டி நாம் வலிமையோடு எதிர்க்க வேண்டும். அரசியல் என்பது அடிப்படையில் கொள்கை சார்ந்தது. நம் கட்சிகளை விட நமது மாநிலத்தின் ,மக்களின் நலனே முக்கியம்.இது தான் எங்கள் நிலைப்பாடும்” என கூறியுள்ளார்.
இதேபோல காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், “சூப்பர் அண்ணன். இதை காங்கிரஸ்கார்கள் சொன்னா ஐடி விங் மேதைகள் எங்களை கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என கூறி வருகின்றனர்” என கூறியுள்ளார்.



Leave a Reply