போட்டிக்கான டி-ஷர்ட் மற்றும் லோகோ அறிமுக விழா கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்வை கோவை காவல் ஆணையாளர் என். கண்ணன் வெளியிட்டார். ஜெம் மருத்துவமனை தலைவர் டாக்டர் சி. பழனிவேலு மற்றும் செயல் அதிகாரி டாக்டர் பி. பிரவீன் ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கடந்த 25 ஆண்டுகளாக ஜெம் அறக்கட்டளை மருத்துவ முகாம்கள், அறுவை சிகிச்சைகள், புற்றுநோய் விழிப்புணர்வு, கல்வி உதவித்தொகைகள் போன்றவற்றின் மூலம் பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறது. ரோட்டரி கிளப் மற்றும் மெட்ரோபோலிஸ் அமைப்புகளின் ஒத்துழைப்பில் 100க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ரூ.3 கோடி மதிப்பிலான அறுவை சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு போட்டி 3 கி.மீ., 5 கி.மீ., 10 கி.மீ., மற்றும் 21 கி.மீ. என நான்கு பிரிவுகளாக நடத்தப்பட உள்ளது. இதற்காக ஏற்கெனவே 1,000க்கும் மேற்பட்ட பெண்கள் பதிவு செய்துள்ள நிலையில், மொத்தமாக 10,000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டிக்கான வழித்தடங்களில் புலியகுளம் – கார்மல் கார்டன் – நிர்மலா கல்லூரி (3 கி.மீ.), ரேஸ்கோர்ஸ் (5 கி.மீ.) மற்றும் திருச்சி ரோடு – வெங்கடலட்சுமி கல்யாண மண்டபம் (10 கி.மீ.) ஆகியவை அடங்கும். போட்டியில் பங்கேற்கும் வீராங்கனைகள் பாதுகாப்பாக பங்கேற்க காவல்துறையும் ஏற்பாட்டாளர்களும் அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
பெண்களின் பாதுகாப்பு, சுய மேம்பாடு மற்றும் பாதுகாப்பான நகரை உருவாக்கும் நோக்கத்துடன் இந்நிகழ்வு நடத்தப்படுவதாக அறக்கட்டளை தெரிவித்துள்ளது. போட்டி காலை 5.30 மணிக்கு தொடங்கும் நிலையில், பங்கேற்பாளர்கள், பார்வையாளர்கள் மற்றும் ஊடகப் பிரதிநிதிகள் அனைவரும் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக ஜெம் மருத்துவமனை வளாகத்தை அடைய வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பதிவு மற்றும் மேலதிக விவரங்களுக்கு 8925847519 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். மேலும் www.coimbatorewomensmarathon.



Leave a Reply