ராம்ராஜ் வேட்டி வாரத்தை முன்னிட்டு ரூ.695/- க்கு சீனியர் செட், ரூ. 495/- க்கு ஜூனியர் செட் வேட்டி சட்டைகள் அறிமுகம்

Spread the love

ராம்ராஜ் காட்டன் வேட்டி வாரத்தை முன்னிட்டு ரூபாய் 595 மற்றும் 695 விலைக்கு கல்ச்சர் கிளப் கலர் சட்டை மற்றும் வேட்டியுடன், ரூபாய் 395 மற்றும் ரூபாய் 495 க்கு லிட்டில் ஸ்டார் கலர் சர்ட்டுடன் வேட்டியும் இணைத்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சமூகத்தின் பண்பாடு, வளம், கற்பனை திறன், கலை உணர்வு என்று எல்லா அம்சங்களிலும் பொருந்தும் விதமாக வேட்டி மற்றும் சர்ட்டுகளை இணைத்து இந்த ஆண்டும் வேட்டி வாரம், வர இருக்கும் பொங்கல் விழாவிற்கு ராம்ராஜ் அறிமுகப் படுத்துகிறது.
ரூபாய் 595 மற்றும் ரூபாய் 695க்கு கல்ச்சர் கிளப் கலர் சர்ட்டுடன் வேட்டிகள் மற்றும் கலாச்சாரத்தை பிறப்பிலிருந்து ஊக்கப்படுத்த உறுதிப்படுத்தும் விதமாக ரூபாய் 395 மற்றும் ரூபாய் 495 க்கு லிட்டில் ஸ்டார் கலர் சர்ட்டுகள் மேட்சிங் பார்டர் வேட்டிகளும் பிரத்தியேகமாக இந்த ஆண்டு வேட்டி வாரம் 2026 இல் விற்பனைக்கு கிடைக்கப்பெறுகிறது.
இந்திய தேசிய பாரம்பரிய கலாச்சார உடை, நெசவாளர் வாழ்வில் வளர்ச்சியையும் வாடிக்கையாளர் முகத்தில் மகிழ்ச்சியையும் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டு வேட்டி வாரம் கொண்டாட ப்படுகிறது.
தமிழக அரசால் 2015 இல் தொடங்கி வைக்கப்பட்ட ஜனவரி 6 வேட்டி தினத்தை ராம்ராஜ் வேட்டிவாரமாக ஒவ்வொரு ஆண்டும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக புதிய ரகங்களை வேட்டிவார விழாவில் அறிமுகப்படுத்தி வாடிக்கையாளருக்கு சலுகை விலையில், வாங்கும் விதமாக கலாச்சாரம் பெருமளவில் வளர்ந்து உயர எல்லா முயற்சிகளையும் எடுத்து வெற்றிகரமாக ஆக்கி வருகிறது.
தமிழர் பாரம்பரிய பொங்கல் பண்டிகையை ஒட்டி வரும் 2026 க்கான முதல் பரிசாக வேட்டி வார கொண்டாட்டத்தில் பெரியவர்களோடு சிறுவர்களும் உடுத்தி மகிழ இந்த ஆண்டு கலர் சர்ட்டுடன் வேட்டி பார்டர் மேட்சாக ஆண்களுக்கும் அதேபோன்று ரகங்கள் சிறுவர்களுக்கும் சலுகை விலையில் அறிமுகமாகிறது. இது ஒரு பொங்கல் பரிசாக உடுத்தி மகிழ அனைவருக்கும் வாய்ப்பு அளிப்பதாயிருக்கும்.
வேட்டி வார ரகங்களின் அறிமுக விழாவில் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் கே.ஆர். நாகராஜன் நிர்வாக இயக்குனர் பி.ஆர். அருண் ஈஸ்வர், இணை நிர்வாக இயக்குனர் எஸ். அஸ்வின், தலைமைச் செயல் நிர்வாகிகள் கே.செல்வகுமார் ஏ.கணபதி அனைவரும் கலந்து கொண்டு புதிய வேட்டி சட்டை ரகங்களை அறிமுக செய்தனர்.