அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 31-ஆம் தேதி: ஈபிஎஸ் தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் நடைபெறுகிறது

Spread the love

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 31-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என கட்சி தலைமை அறிவித்துள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் வரவிருக்கும் தேர்தல் பணிகள், கட்சியின் அமைப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.