நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் முதல் ஜனவரி வரை நிலவும் குளிர்காலத்தின் தாக்கமாக, கடந்த சில நாட்களாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் உறைபனிப் பொழிவு காணப்படுகிறது. தேயிலை தோட்டங்கள் மற்றும் புல்வெளிகள் வெள்ளை போர்வை போர்த்தியதுபோல் காட்சியளிக்கின்றன.
வாகனங்களின் மேல் கூட உறைபனி படிந்து காணப்படும் நிலையில், காலை வெயில் வந்த பின்னரும் பனி ஆவியாகாமல் நீடிக்கிறது. இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்கள் கம்பளி ஆடைகள் அணிந்து வருகின்றனர்.
உறைபனியை காண சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு அதிகளவில் குவிந்து வருவதையடுத்து, பாதுகாப்பு காரணங்களால் சில பகுதிகளில் வனத்துறை தடை விதித்துள்ளது. சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக காட்சி காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



Leave a Reply