காப்பீட்டு தொகைக்காக தந்தையை கட்டுவிரியனை கடித்த வைத்து கொலை செய்த மகன்கள்

Spread the love

திருவள்ளூர் அருகே, காப்பீட்டு பணம் பெறுவதற்காக தந்தையை கட்டுவிரியன் பாம்பை விட்டு கடிக்க வைத்து கொலை செய்த கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பாக, தந்தையின் இரு மகன்கள் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்த கணேசன் (56), அரசு பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்தார். கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி, அவர் வீட்டின் குளியலறையில் பாம்பு கடித்து இறந்ததாக கூறப்பட்டது. ஆனால், காப்பீட்டு நிறுவனத்தின் சந்தேகத்தைத் தொடர்ந்து நடந்த விசாரணையில், மகன்களே திட்டமிட்டு கொலை செய்தது தெரியவந்தது.

கடனில் சிக்கியிருந்த குடும்பம், 2.5 கோடி ரூபாய் காப்பீட்டு தொகையைப் பெற தந்தையை இயற்கை மரணமாக காட்ட திட்டமிட்டதாக போலீசார் தெரிவித்தனர். முதலில் நல்ல பாம்பால் கடிக்க வைத்தும் மரணம் ஏற்படாததால், பின்னர் கட்டுவிரியன் பாம்பை கொண்டு வந்து தூங்கிக் கொண்டிருந்தபோது கடிக்க வைத்துள்ளனர்.

இந்த வழக்கில், மகன்கள் மோகன்ராஜ், அரிஹரன் உள்ளிட்ட ஆறு பேரும் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.