,

கோவையில் கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

murder
Spread the love

கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் ஆறுமுகம்(48) கடந்த 2020-ம் ஆண்டு அவரது மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக சூலூர் காவல் நிலையத்தில் ஆறுமுகம் மீது வழக்குப்பதிவு செய்தது.

இவ்வழக்கின் விசாரணை கூடுதல் உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இவ்வழக்கின் விசாரணை இன்று முடிவு பெற்று குற்றவாளி ஆறுமுகத்திற்கு ஆயுள் சிறைதண்டனை மற்றும் ரூபாய் 5,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற காவலர் பிரபு ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரிநாராயணன்  பாராட்டினார்.