கோவை, சூலூர் அருகே கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் நேற்று மாலை திடீரென முள்ளம்பன்றி ஒன்று நுழைந்ததால், வீட்டில் இருந்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து அச்சத்தில் உறைந்தனர்.
இதையடுத்து, உடனடியாக ‘ஃபிரண்ட்ஸ் ஆப் வைல்ட் லைஃப்’ அமைப்பினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்குச் சென்ற வன உயிரின ஆர்வலர்கள், நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு முள்ளம்பன்றியை பாதுகாப்பாக பிடித்து சாக்குக்குள் அடைத்து, கோவை மாவட்ட வன அலுவலகத்தில் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர், அந்த அரிய வகை உயிரினமான முள்ளம்பன்றியை வனத்துறையினர் மீட்டு, தொண்டாமுத்தூர் அருகே போளுவாம்பட்டி பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தனர்.
கோவை பகுதியில் அரிய வகை வன உயிரினமான முள்ளம்பன்றி வீடுகளுக்குள் நுழைந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.



Leave a Reply