கூட்டணி, தேர்தல், எதிர்கால நிலை குறித்து விவாதம்
“மூடிய அறையில் எங்களுக்கு உரிமையுள்ளது; கூட்டணியில் யார் இருந்தால் என்ன லாபம், நஷ்டம் என்பதையும், 2021 மற்றும் 2024 தேர்தல் அனுபவங்களையும் எடுத்துச் சொல்லியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நான்கு முனைத் தேர்தல் நிலை உருவாக வாய்ப்புள்ளது,” என்றார்.
என்.டி.ஏ. கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோருக்கு இடமளிப்பது குறித்து தேசிய தலைவர்கள் முடிவு செய்வார்கள் என்றும், தமிழ்நாட்டில் தலைமை தாங்கும் ஈபிஎஸ் மற்றும் நயினார் நாகேந்திரன் அறிவிப்பார்கள் என்றும் குறிப்பிட்டார். ஓபிஎஸ்–டிடிவி தினகரன் சந்திப்பு நட்பு ரீதியில் நடைபெற்றதாகவும் தெரிவித்தார்.
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் குறித்து பேசும் போது, “8 ஆண்டுகளில் 75,000 வழக்குகளை முடித்திருக்கும் நீதிபதிக்கு தீர்ப்பு அளித்ததற்காக திமுக அச்சம் ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு எதிராக அவதூறுகளை பரப்பி மாண்புக்கு பங்கம் விளைவித்துள்ளனர்,” என்று குற்றம் சாட்டினார்.
திருப்பரங்குன்றம் மலையில் சர்வேகல் இல்லை என்பது அரசின் பொய்யான தகவல் என தெரிவித்த அவர், “அதிமுக–பாஜக கூட்டணிக்கு மேலும் முக்கிய கட்சிகள் சேர வேண்டியுள்ளது” என கூறினார்.



Leave a Reply