மேக்கர்ஸ்ஹப், மாணவர்களுக்கான கல்வி ஆய்வகம் தொடக்கம்

Spread the love

மேக்கர்ஸ்ஹப் என்பது 5 வயது முதல் 25 வயது வரையிலான மாணவர்களுக்கு அனுபவக் கற்றல் முறையில் கல்வி வழங்கும் ஸ்ட்ரீம் ஆய்வகமாக செயல்பட்டு வருகிறது. மாணவர்களின் சிந்தனை திறன், படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் நோக்கில் இந்த கல்வி மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மேக்கர்ஸ் ஆய்வகத்தை டாக்டர் ரமணன் ராமநாதன், நிறுவனர் – அடல் இன்னோவேஷன் மிஷன் திறந்து வைத்ததுடன், மேக்கர்ஸ்ஹப் வாரியத்தையும் தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் அடிப்படை மின்னணுவியல் முதல் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பயன்பாடுகள் வரை பல்வேறு தயாரிப்புகளை உருவாக்கும் வாய்ப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில், ஸ்ரீப்ரியா கௌஷிக், நிறுவனர் – பினாகா இன்னோவேஷன் “வுமன் இன் ஸ்ட்ரீம்” என்ற புதிய முயற்சியை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் ஸ்ட்ரீம் துறைகளில் வழிகாட்டிகளாகத் திகழ்ந்து, எதிர்கால தலைமுறையை வழிநடத்தும் வகையில் மேம்படுத்தப்பட உள்ளனர்.
மேலும், எக்ஸ்பெரிமென்டரும் மேக்கர்ஸ்ஹப் நிறுவனமும் இணைந்து, ரூ.3,00,000 மதிப்புள்ள “சயின்ஸ் இன் ஆக்‌ஷன்” திட்டத்தை மசக்காளிபாளையம் மாநகராட்சிப் பள்ளிக்கு நன்கொடையாக வழங்கினர்.
இந்தத் திட்டத்தின் மூலம் மாணவர்கள் அனுபவக் கற்றல் வழியாக அறிவியலை நேரடியாக கற்றுக்கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள்.