நீதிமன்றத் தீர்ப்பையும், நீதிபதியையும் அவமதித்துள்ளதாகக் கூறி திமுக அரசு மற்றும் எம்.பி. கனிமொழியை கண்டித்து பாஜக வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கோவை நீதிமன்றம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் சம்பவத்தில், நீதிமன்ற தீர்ப்பின் படி தீபம் ஏற்றப்படாததை கடுமையாக கண்டித்த வழக்கறிஞர்கள், இதன் மூலம் நீதிமன்ற தீர்ப்பும் நீதிபதியும் அவமதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழக அரசு, நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் எம்.பி. கனிமொழியை எதிர்த்துப் பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும், நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தமிழக அரசுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பாஜக வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தால் கோவை நீதிமன்றம் முன்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, நிலைமையை கண்காணித்தனர்.



Leave a Reply