,

ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஸ்டிட்யூட் ஆஃப் பாராமெடிக்கல் சயின்ஸ் விளக்கு ஏற்றும் விழா

florence nightingale
Spread the love

ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரியில் விளக்கு ஏற்றும் விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லட்சுமிநாராயணசுவாமி தலைமை வகித்தார் . சேலம் கோகுலம் செவிலியர் கல்லூரி முதல்வர், பேராசிரியர் டாக்டர் கே.தமிழரசி தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். டாக்டர் டி. நிர்மலா கல்லூரி முதல்வர் வரவேற்பு உரையுடன் நிகழ்ச்சி தொடங்கியது.
டி.கிரிஜா, முதன்மை செவிலியர் அதிகாரி, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உறுதிமொழியை வாசிக்க, முதலாம் ஆண்டு (2023-2024) செவிலியர். மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
விழாவின் முதன்மை விருந்தினர் கலந்து கொண்டு பேசுகையில், மாணவர்கள் மேம்படுத்தப்பட்ட அறிவும், போதுமான திறமையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இம் மூன்றும் ஓரு செவ்வனே பணி செய்ய இன்றியமையாதது என்று வலியுறுத்தினார்.
டாக்டர்.கிரிஜாகுமாரி, துணை முதல்வர், நன்றியுரை வழங்க விழா தேசிய கீதத்துடன் நிறைவு பெற்றது.