​திருப்பரங்குன்றம் விவகாரம்: கோவையில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் பலர் கைது

Spread the love

திருப்பரங்குன்றம் விவகாரத்தை கண்டித்து, இந்து முன்னணி கட்சியினர் கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற நிலையில், காவல்துறையினர்  ஆர்ப்பாட்டத்திற்கு வந்தவர்களை கைது செய்தனர்.

தமிழ் கடவுள் முருகனின் முதல் படைவீடாக பக்தர்களால் போற்றப்படும் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்க மறுக்கப்பட்டதாகவும், இந்துக்களுக்கு எதிராக இந்து அறநிலையத் துறையும் தமிழக அரசும் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டி, கோவை காந்தி பார்க் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக இந்து முன்னணி கட்சி அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இதையடுத்து, காந்தி பார்க் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோவை மாநகர காவல்துறை கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டது. சுமார் 500 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆர்ப்பாட்டம் நடைபெறாமல் தடுக்க முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இந்த நிலையில், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த இந்து முன்னணி கட்சியினரை காவல்துறையினர் உடனடியாக தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களை கைது செய்து, போலீஸ் வாகனங்களில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.