14 தளங்களுடன் 1,800 வீடுகளைக் கொண்ட மிகப்பெரிய இந்த குடியிருப்பு வளாகத்தில் சில நாட்களுக்கு முன்பு நுழைந்த கொள்ளை கும்பல் 13 வீடுகளில் கொள்ளையடித்தது. இதில் 56 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டுப் போனது.
சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகள் குனியமுத்தூர் அருகே உள்ள குளத்துப்பாளையம் பகுதியில் மறைந்துள்ளனர் என்பதைக் கண்டறிந்தனர்.
தனிப்படை போலீசார் அங்கு சென்று கைது செய்ய முயன்றபோது, குற்றவாளிகள் கத்தியுடன் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் காவலர் பார்த்திபன் கையில் காயமடைந்தார். தற்காப்பிற்காக போலீசார் துப்பாக்கி பிரயோகம் செய்ததில் மூன்று கொள்ளையர்களும் காலில் காயமடைந்தனர்.
காயமடைந்த மூவரும் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் உத்தரப்பிரதேசம் மஜீத்புரா மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிக் (45), கல்லூர் (60), இர்ஃபான் (48) என்று அடையாளம் காணப்பட்டனர்.
சிகிச்சை தொடர்ந்த நிலையில், ஆசிக் ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மற்ற இருவரிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



Leave a Reply