நெல்லை தருவை பகுதியை சேர்ந்த பாலமுருகன் மற்றும் ஸ்ரீ பிரியா சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். கணவன்–மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஸ்ரீ பிரியா கோவையில் உள்ள மகளிர் விடுதியில் தனியாக தங்கி வேலை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில், பாலமுருகனின் உறவினரான இசக்கி ராஜாவுக்கும் ஸ்ரீ பிரியாவுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஸ்ரீ பிரியாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இசக்கி ராஜா வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பதிவேற்றியதை பார்த்த பாலமுருகன் கடும் கோபமடைந்தார்.
இதனால் ஆவேசத்துடன் மகளிர் விடுதிக்கு வந்த பாலமுருகன், ஸ்ரீ பிரியாவை அரிவாளால் தாக்கி கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். கொலைக்குப் பிறகு, மனைவியின் சடலத்துடன் இருக்கும் புகைப்படத்தையும் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பதிவேற்றியுள்ளார்.
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பாலமுருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Leave a Reply