இனி விமானங்களில் இருமுடி எடுத்துச் செல்லலாம்

Spread the love
மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ராமமோகன் நாயுடு தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், அய்யப்ப பக்தர்களின் பாரம்பரிய உணர்வுகளை மதிக்கும் பொருட்டு புதிய முடிவொன்றை அறிவித்துள்ளார்.

அதில், புனிதமான இருமுடியுடன் தொடர்புடைய பக்தர்களின் மத உணர்வுகளை கருத்தில் கொண்டு, விமானங்களில் அய்யப்ப பக்தர்கள் தங்களுடன் இருமுடியை எடுத்துச்செல்ல அனுமதி வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார். இதன்படி, பொருட்கள் வைக்கும் சரக்கு பகுதிக்கு அனுப்பாமல், பயணிகள் பகுதியில் கொண்டு செல்லும் ‘கேபின் லக்கேஜ்’ ஆக இருமுடியை வைத்துக்கொள்ளலாம்.

இது மூலம், பக்தர்களின் பாரம்பரிய பழக்கவழக்கங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை அமைச்சகம் உறுதி செய்துள்ளதாக அவர் கூறினார். தேவையான அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளும் பின்பற்றப்படும் என்றும், அதே வேளையில் பக்தர்களின் உணர்வுகளுக்கு முழு மதிப்பு வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

அனைத்து சமுதாயங்களின் நம்பிக்கைகளுக்கும் மரியாதை அளிக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.