ரூ.1.17 கோடி விலை போன விஐபி கார் நம்பர்

Spread the love

ஹரியானாவில் கார் விஐபி (VIP) அல்லது ஃபேன்சி நம்பர் பிளேட்டு களுக்கான ஆன்லைன் ஏலத்தில், இதுவரை இல்லாத வகையில் ஒரு நம்பர் பிளேட் சாதனை விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் நடைபெறும் இந்த ஏலத்தில், இந்த வாரம் ‘HR88B8888’ என்ற பதிவு எண்ணுக்கே அதிக ஏலப்போட்டி ஏற்பட்டது.
வெறும் ரூ.50,000 தான் அடிப்படை ஏலத் தொகை என நிர்ணயிக்கப் பட்டிருந்தாலும், இந்த எண்ணுக்காக மட்டும் 45 பேர் விண்ணப்பித்தனர். கடும் போட்டியின் காரணமாக, இந்த நம்பர் பிளேட்டின் விலை ரூ.1.17 கோடி என்ற அதிர்ச்சி அளிக்கும் அளவுக்கு உயர்ந்தது. இது ஹரியானாவில் இதுவரை அதிக விலைக்கு விற்கப்பட்ட நம்பர் பிளேட் என்ற புதிய சாதனையை உருவாக்கியுள்ளது.
HR88B8888 என்ற எண்ணின் மையக்கருத்து ‘B’ என்ற எழுத்தின் தோற்றத்தில் உள்ளது. ஆங்கில எழுத்து பெரிய எழுத்தில் ‘B’ பார்ப்பதற்குப் பெரும்பாலும் எண் 8 போலவே காட்சியளிக்கிறது. இதனால் இந்த நம்பர் பிளேட்டில் 8 என்ற எண் எட்டு மடங்கு தொடர்ச்சியாக வரும் தனிப்பட்ட தோற்றம் கிடைக்கிறது. இந்த தன்மையே வாங்கு
பவர்களுக்கு அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் பெருமை குறிக்கோளாக கருதப்படுவதால் விலை உயர்ந்தது.
கடந்த வாரமே HR22W2222 என்ற மற்றொரு ஃபேன்சி நம்பர் பிளேட் ரூ.37.91 லட்சத்திற்கு ஏலம் போனது. தற்போது ரூ.1.17 கோடிக்கு விற்கப்பட்டுள்ள HR88B8888 அந்த சாதனையை மிகத் தெளிவாக முறியடித் துள்ளது.
இந்த ஏலத்திற்கான விண்ணப்பங்கள் வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் திங்கள்கிழமை காலை 9 மணி வரை பெறப்பட்டு, புதன்கிழமை மாலை 5 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படும் நடைமுறை பின்பற்றப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.