இதைத்தொடர்ந்து மேயர் ரங்கநாயகி தலைமையில் மாநகராட்சி கூட்டம் துவங்கியது. அப்போது மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்த மோடி அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதாக மாநகராட்சி மேயர் அறிவித்தார். இதைத்தொடர்ந்து திமுக மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் மத்திய அரசை கண்டித்து மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தினர்.
அப்போது அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் எழுந்து திமுக அரசு ரயில் திட்ட அறிக்கையை முறையாக தயாரித்து சமர்ப்பிக்காமல் போனதால் திட்டம் பறிபோனது என்று தெரிவித்தார். இது தொடர்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் நின்றிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கவுன்சிலர்கள் பிரபாகரன் மற்றும் ரமேஷ் ஆகியோரை சூழ்ந்து முழக்கங்களை எழுப்பினர்.
இதை தொடர்ந்து அதிமுக மற்றும் திமுக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதிமுக கவுன்சிலர்கள் வைத்திருந்த பதாகைகளை திமுக கவுன்சிலர்கள் பிடுங்கி கிழித்து எறிந்தனர். இதை தொடர்ந்து பிரபாகரன் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் கூட்ட அரங்கில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்த மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக மேயர் ரங்கநாயகி தெரிவித்தார். மேலும் மாமன்ற கூட்டத்தில் ரகளையில் ஈடுபட்ட அதிமுக கவுன்சிலர் பிரபாகரனை இரண்டு மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்தார்.



Leave a Reply