ஹாசினி பலாத்கார–படுகொலை வழக்கு: தஷ்வந்த் விடுதலை தொடர்பான சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி

dhashwanth
Spread the love

7 வயது சிறுமி ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தஷ்வந்த் விடுதலைக்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

2017 ஆம் ஆண்டு போரூரில் வசித்த சிறுமி ஹாசினி கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி, பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி தஷ்வந்த் போலீசால் கைது செய்யப்பட்டார்.

விசாரணை நடந்த கீழ்நீதிமன்றமும் பின்னர் சென்னை உயர்நீதிமன்றமும் தஷ்வந்த்க்கு மரண தண்டனை விதித்தன. இதை எதிர்த்து தஷ்வந்த் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

கடந்த அக்டோபர் 8ஆம் தேதி, வழக்கில் உள்ள சான்றுகளில் சந்தேகம் இருப்பதாகக் கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், தஷ்வந்தை விடுதலை செய்யும் உத்தரவு பிறப்பித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

இதன் மூலம் தஷ்வந்த் விடுதலைக்கு தடையாக இருந்த கடைசி சட்டவழியும் முடிவுக்கு வந்துள்ளது.