முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததைப் பற்றி கேட்ட ஊடக கேள்விக்கு, நடிகர் ரஜினிகாந்த் “நோ கமெண்ட்ஸ்” என சுருக்கமான பதில் அளித்தார்.
கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழா (IFFI) நவம்பர் 20ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இவ்விழா நாளை (நவம்பர் 28) வரை நடைபெறுகிறது. இதில் இந்திய திரைப்படத்துறையில் முக்கிய பங்களிப்பு செய்த கலைஞர்களுக்கு சிறப்பு கவுரவங்கள் வழங்கப்படுகின்றன.
திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக நடிகர் ரஜினிகாந்த் இவ்விழாவில் கௌரவிக்கப்படுகிறார். இதை முன்னிட்டு, அவர் தனது மனைவி லதா மற்றும் மகள் ஐஸ்வர்யாவுடன் இன்று காலை கோவா பயணத்திற்காக சென்னை சர்வதேச விமான நிலையம் வந்திருந்தார்.
அப்போது செய்தியாளர்கள் செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த விவகாரத்தை பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு ரஜினிகாந்த் “நோ கமெண்ட்ஸ்” என பதிலளித்தார்.
பின்னர், தனது கோவா பயண நோக்கத்தைப் பற்றி பேசிய அவர், “கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில், என்னை கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது. அதற்காக செல்கிறேன்,” என்று தெரிவித்தார்.



Leave a Reply