தனிஷ்க் மற்றும் சச்சின் டெண்டுல்கர், ‘ கோல்ட் எக்ஸ்சேஞ்ச் முன்முயற்சி’ நவம்பர் 30,2025 வரை நீட்டிப்பு

Spread the love

டாடா குழுமத்தின் ஒரு அங்கமான தனிஷ்க், இந்தியாவில் அதிக நம்பிக்கைக்குரிய ஆபரண பிராண்டாக திகழும் நிலையில் இந்நாட்டில் பழைய தங்க நகைகளை புதிய நகைகளாக மாற்றும் இந்நாட்டின் மிகப்பெரிய இயக்கத்தை தொடங்கி தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.  அனைத்து அம்சங்களிலும், நிலைகளிலும் சுயசார்பு என்ற இலக்கை நோக்கிய இந்தியாவின் இயக்கத்திற்கு ஆதரவளிப்பது இதன் நோக்கமாகும்.

நாட்டின் நலன் சார்ந்த இந்த குறிக்கோளை வலுப்படுத்துவதற்காகவும், இந்த இயக்கத்தின் மைய மதிப்பீடுகளை முன்னிலைப்படுத்தவும் நம்பிக்கை, நேர்மை மற்றும் ஒருமைப்பாட்டுடன் ஒருங்கிணைத்துப் பார்க்கப்படுகின்ற பிரபல ஆளுமையான கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்  உடன் தனிஷ்க் இணைந்திருக்கிறது.  2025 நவம்பர் 30-ம் தேதி வரை அனைத்து கேரடேஜ்களிலும் (9 KT என்ற குறைந்த அளவு வரை) பழைய தங்க நகைகளை மாற்றும்போது பூஜ்ய (0%*) பிடித்தம் என்ற சிறப்பு சலுகையை நுகர்வோர்களுக்காக தனிஷ்க் முதன் முறையாக வழங்குகிறது.  தேச நலன் மீது அக்கறையுடன் சுயசார்பை ஆதரிக்கும் இந்த சிறப்பான முயற்சியில் ஒவ்வொரு இந்தியரும் பங்கேற்பதை இத்திட்டத்தின் மூலம் தனிஷ்க் எளிதாக்கியிருக்கிறது.

டைடன் கம்பெனி லிமிடெட் – ன் ஆபரண பிரிவின் தலைமை செயலாக்க அதிகாரி  அஜாய் சாவ்லா மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்த இணைப்பு குறித்து விவரித்தனர்.