கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் மூத்த தலைவருமான செங்கோட்டையன், தன்னை கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியது மனவேதனை அளிப்பதாக தெரிவித்தார்.
செய்தியாளர்கள் அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவிருக்கிறாரா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு நேரடியாக மறுப்பு தெரிவிக்காமல் பதிலளித்த அவர், “50 ஆண்டுகளாக அரசியலில் பல ஏற்றத் தாழ்வுகளை சந்தித்து இந்த இயக்கத்திற்காக உழைத்துள்ளேன். ஆனால் இன்று எனக்கு கிடைத்திருக்கும் பரிசு — உறுப்பினர் கூட இருக்க முடியாத நிலை. இது என் மனதை வேதனை அடையச் செய்கிறது. அதை உங்களைப் போன்றோர் நன்றாகவே அறிந்திருப்பீர்கள்” என்று கூறினார்.
அதற்கு மேல் எந்த கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் என்றும் அவர் கூறினார்.
தெ.வெ.கவில் இணைவது குறித்து தெளிவான மறுப்பு வழங்காமல், பதிலாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டதின் வேதனையை அதிகமாகப் பேசியிருப்பது, அரசியல் வட்டாரங்களில் பல்வேறு யூகங்களை எழச் செய்து வருகிறது.



Leave a Reply