கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை, திருப்பி அனுப்பியதற்கான காரணங்களை துல்லியமாக குறிப்பிட்டு, மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற செயலாளர் சரோஜினி சர்மா அனுப்பிய கடிதத்தில், திட்ட அறிக்கையில் உள்ள முரண்பாடுகள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது
கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி மற்றும் நிதியுதவி கேட்டு, மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறைக்கு, தமிழகஅரசுவிரிவான திட்ட அறிக்கை அனுப்பியது. அதை பரிசீலித்த மத்தியஅரசு, ‘மெட்ரோரயில்’கொள்கையை சுட்டிக் காட்டி, முழுமையான நகர போக்குவரத்து திட்ட அறிக்கை கேட்டு, திருப்பி அனுப்பியது. அதன்பின், அனுப்பப்பட்டது. தற்போது, கோவை மெட்ரோவுக்கு அனுமதிமறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூடுதல் ஆவணங்கள் இணைத்து, மீண்டும்அறிக்கை இச்சூழலில், மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறையின் சார்பு செயலாளர் சரோஜினி சர்மா, தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் குறித்து செயலாக்கத்துறையின் முதன்மைசெயலருக்கு.மூன்று பக்க கடிதம் அனுப்பியுள்ளார். அதில், மூன்றாம் பக்கத்தில் இருந்த தகவல்களை மட்டுமே சமூக வலைதளங்களில் பரவ விட்டு, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்து விட்டதாக, வதந்தி பரப்பப்படுகிறது. அந்த கடிதத்தில் கூறியுள்ளதாவது, கோவை நகர்ப்புற வழித்தடத்தில் சராசரி வேகம் மணிக்கு, 30 கி.மீ., மெட்ரோ ரயில் சராசரி வேகம் மணிக்கு 34 கி.மீ., இதன்படி கணக்கிட்டால், சாலையில் இயக்கப்படும் போக்குவரத்து சராசரி வேகம், ‘மெட்ரோ’ வேகத்துக்கு சமமாகவே இருக்கிறது. இதனால், அவர்களுக்கு சராசரியாக 2-3 நிமிடங்களே மிச்சம் பிடிக்க முடியும்.
இதனால்,பிறபோக்குவரத்து முறைகளில் இருந்து, மெட்ரோவுக்கு பயணிகள் மாறுவது சாத்தியமற்றது.
கோவை மெட்ரோ திட்டம் 34 கி.மீ., துாரத்துக்கு திட்டமிடப்பட்டு, தினமும் 5.9 லட்சம்பயணிகள் செல்வார்கள் என,கணித்திருப்பதுஅதிகமாக தோன்றுகிறது. ஏனெனில், சென்னை மெட்ரோ பேஸ்-1 (55 கி.மீ.,) வழித்தடத்தில், சராசரியாக 4 லட்சம் பயணிகளே சென்றுள்ளனர்.
விரிவான திட்ட அறிக்கையின் படி, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கோவை மாநகராட்சி பகுதியில் மக்கள் தொகை 15.84 லட்சம். தவிர, உள்ளூர் திட்டகுழும பகுதியில் வசிக்கும் மக்கள் 7.7 லட்சம். தற்போது முன்மொழிந்துள்ள மெட்ரோ வழித்தடங்கள் உள்ளூர் திட்ட குழும பகுதிக்கு சேவை அளிக்காததால், அப்பகுதி மக்கள் மெட்ரோ பயன் படுத்த வாய்ப்பில்லை.
மெட்ரோ வழித்தடத்தில் பல இடங்களில், போதுமான சாலை வசதி இல்லை என்பது தெரியவருகிறது. 22 மீட்டர் அகலத்துடன் முன்மொழியப்பட்ட, உயர்
மட்ட மெட்ரோ அமைப்பை அமைக்க, போதுமான சாலை வசதி இல்லாத காரணத்தால், தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமற்றதாக இருக்கலாம். தேவையான இடங்களில் கட்டடங்களை இடிக்கவேண்டிய சூழல் வரும். இது, அதிக செலவையும், பொதுமக்களுக்கு சிரமத்தையும் ஏற்படுத்தும். விரிவான திட்ட அறிக்கையில், மூன்று ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என முன்மொழியப்பட்டுள்ளது. இது. நடைமுறையில் சாத்தியம் இல்லை. மெட்ரோ திட்டங்கள் அதிக செலவு கொண்டவை. நீண்ட கால தேவையை கணக்கில் கொண்டு துல்லியமாக திட்டமிட வேண்டும். இதனால், கோவைக்கு அதிவிரைவு பஸ் போக்குவரத்து அமைப்பு உள்ளிட்ட உள்ளிட்ட திட்டங்கள் ஏற்றது
இந்த விஷயங்களை கருத்தில் கொண்டு, கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங் களுக்கான விரிவான திட்ட அறிக் கைகள், திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறியுள்ளது. அதில்



Leave a Reply