ஏர் இந்தியா நிறுவனம் தனது சர்வதேச பயணிகளுக்காக புதிய உணவுச் சலுகையை அறிவித்துள்ளது. சென்னையிலிருந்து துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு செல்லும் ஏர் இந்தியா விமானங்களில் இனி தென் மாநிலங்களின் பாரம்பரிய உணவுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.
இந்த புதிய உணவுப் பட்டியலில் தமிழகத்தின் சிறப்பு மிளகாய் பொடி இட்லி, முந்திரி உப்புமா, மினி மைசூர் மசால் தோசை, கிச்சடி, பரோட்டா, சாம்பார், தேங்காய் சட்னி, கார சட்னி, புதினா சட்னி உள்ளிட்ட பல சுவையான வகைகள் இடம் பெற்றுள்ளன.
இதனுடன், பிரியாணி, மலபாரி சிக்கன் கறி, சிக்கன் பிம்பாப் போன்ற அசைவ உணவுகள், வட மாநிலங்களின் சைவ–அசைவ உணவுகள், ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உணவுவகைகள், மேலும் ஜப்பானிய உணவுகளும் வழங்கப்படும்.
பயணிகள் விமான டிக்கெட்டை பதிவு செய்யும் போது சைவ அல்லது அசைவ உணவுகளைத் தேர்வு செய்து கொள்ளலாம். முதல் கட்டமாக சர்வதேச விமானங்களில் மட்டும் இந்த சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகளின் வரவேற்பைப் பொறுத்து, விரைவில் உள்நாட்டு விமான சேவைகளிலும் இந்த வசதி சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



Leave a Reply