வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுணன், விபி.கந்தசாமி, கே ஆர்.ஜெயராம், முன்னாள் அமைச்சர்கள் பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஏ.கே.செல்வராஜ், செ.தாமோதரன், செ.ம.வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சிறப்புரை ஆற்றுகையில், எஸ்ஐஆர் பணிகள் தொய்வாக நடைபெறுகிறது எனத்தெரிவித்த அவர் , கோவையில் அதிக இடங்களில் திமுக அதிகாரிகளை மிஸ் யூஸ் செய்கிறார்கள் என்றும் சில இடங்களில் மொத்தமாக பார்ம்களை வாங்கி செல்கிறார்கள் என குற்றம் சாட்டினார்.
அதிமுக முகவர்கள் சிறப்பான முறையில் பணியாற்றி நியாயமான வாக்காளர்களை பதிவு செய்ய வேண்டும். தவறான வாக்காளர்கள் பதிவு செய்ய கூடாது. இல்லாத வாக்காளர்களை பதிவு செய்ய முயற்சி நடக்கிறது எனவும் தெரிவித்த அவர் , அதிமுகவினர் கண்காணித்து வருகின்றனர். கோவை மாவட்டத்தில் பல திட்டங்களை செயல்படுத்தி மிகப்பெரிய வளர்ச்சியை ஜெயலலிதா, எடப்பாடியார் தந்தார்கள். கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை எடப்பாடியார் அறிவித்தார். கோவை, மதுரை மெட்ரோ வேண்டும் என பிரதமர் மோடியிடம் எடப்பாடியார் கோரிக்கை வைத்தார்.
மெட்ரோ தொடர்பான விவரங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். எடப்பாடி முதலமைச்சராக வந்த பிறகு, கண்டிப்பாக மெட்ரோ ரயில் வரும் என்ற அவர் , அத்திக்கடவு – அவிநாசி 2 திட்டம் கொண்டு வரப்படும் என்றார். மேலும் தொழில் துறை, மக்கள் கோரிக்கைகளை எடப்பாடியார் பிரதமர் மோடியிடம் வழங்கி செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்திதிருக்கிறார். திமுக விமான நிலைய விரிவாக்கம்திட்டத்தை ஆட்சியே முடியும் நிலையிலும் எதுவும் செய்யவில்லை எனவும் குற்றம் சாட்டினார் . மேலும் 2026ல் முதலமைச்சராக எடப்பாடியார் வருவது உறுதி
மத்திய அரசிடம் இருந்து திட்டங்களை வாங்கி தருவார் என குறிப்பிட்டார் மேலும் மெட்ரோ ரயில் திட்டம் ஆய்வு செய்ய 3 கோடி நிதியை எடப்பாடியார் ஒதுக்கினார். எல்லா வழித்தடத்திலும் வர வேண்டும் என அதிமுக திட்டம் வகுத்த நிலையில் . திமுக இரண்டு வழிகளில் மட்டுமே கொண்டு வரும் வகையில் மாற்றியுள்ளார்கள். மேலும் மெட்ரோ ரயில் திட்டம் வேண்டும் என போராட்டம் நடத்தும் திமுக டெல்லியில் போராடலாமே , 40 எம்பிக்கள் கொண்டு நாடாளுமன்றத்தை முடக்க வேண்டியதுதானே என கேள்வி எழுப்பினார்
இக்கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டாக்டர் ஜெ.ஜெயவர்தன், யூ.ஆர்.கிருஷ்ணன், தியாகராஜன், மாவட்ட அவைத் தலைவர் ஏ. வெங்கடாசலம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஓகே. சின்ராஜ், எட்டிமடை ஏ.சண்முகம், கஸ்தூரி வாசு, மகாலிங்கம், பிரேமா, கொள்கை பரப்புத் துணை செயலாளர் தோப்பு க.அசோகன், அதிமுக மாணவரணி செயலாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



Leave a Reply