மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் பரப்பும் தகவல்கள் “பொய் பிரச்சாரம்” என அவர் குற்றம்சாட்டினார். மக்கள் தொகை மற்றும் மெட்ரோ பயன்பாடு தொடர்பான தகவல்களை சரியாக வழங்காததே தமிழக அரசின் தவறு எனவும், மத்திய அரசு காட்டிய வரையறைகள் அனைத்துக்கும் மாநில அரசு தேவையான விளக்கங்களை தரவில்லை எனவும் தெரிவித்தார்.
கோவை மெட்ரோ அறிக்கையில் நெரிசலான பிக் பஜார், நஞ்சப்பா சாலை, பெரியகடை வீதி போன்ற பகுதிகளில் திட்டத்தை செயல்படுத்த, பல கடைகள் இடிக்க வேண்டிய சூழல் இருந்தும், அதனை பொருட்படுத்தாமல் தி.மு.க அரசு செயல்படுத்த முடியாத அறிக்கையைத் தான் மத்திய அரசிடம் அனுப்பியுள்ளதாக அவர் விளக்கினார்.
கோவை மக்கள் தி.மு.கக்கு ஒரு தொகுதியும் அளிக்காததை மனதில் கொண்டு பழிசுமத்தும் வகையில் திட்ட அறிக்கை அனுப்பப்பட்டதாக அவர் குற்றம்சாட்டினார். பாட்னா, போபால் போன்ற நகரங்கள் சுற்றுலா மற்றும் நிர்வாக காரணங்களை அடிப்படையாகக் கொண்டு விரிவான அறிக்கை கொடுத்து அனுமதி பெற்றிருப்பதை அவர் எடுத்துக்காட்டினார்.
“2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்ற பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகி, கோவைக்கு மெட்ரோவை நிச்சயம் கொண்டு வருவோம். கோவை மக்களுக்கு 10க்கு 10 அளித்த நம்பிக்கைக்கான பதிலாக, முழுமையான திட்டத்துடன் மெட்ரோவை நிறைவேற்றுவோம்” என அவர் உறுதிமொழி அளித்தார்.
பிரதமர் மோடி வழங்கிய பல்வேறு திட்டங்கள் — ஸ்மார்ட் சிட்டி, மருத்துவக் கல்லூரிகள், ரயில்வே மேம்பாடு, வீட்டு வசதி, விவசாய நிவாரணம் போன்றவற்றை பட்டியலிட்டு, “மோடி அரசுக்கு கெட்ட பெயர் கொடுக்க தி.மு.க முயற்சி செய்கிறது” என்றார்.
கல்வித்துறையில் பாதுகாப்பு குறைபாடு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு, கொள்ளை-வழிப்பறி சம்பவங்கள் போன்றவை அதிகரித்து வருகின்றன என கூறிய அவர், “டி.என்.ஏ” என்று தி.மு.க தலைமையிடம் குறைசொல்லாமல் பேசுவதை விமர்சித்தார். பிரதமர் குறித்து அவதூறு பேசியவர்களைப் பற்றி புகார் அளித்தபோதும், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.
கோவை மெட்ரோ குறித்து தனது கருத்தை சட்டமன்ற உறுப்பினர் ஆக இருந்தும் கேட்டதாக இல்லை என்றும், மெட்ரோ அலுவலகம் கூட கோவையில் அமைக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
“இந்த மெட்ரோ விவகாரத்தில் தி.மு.க இரட்டை வேடம் போடுகிறது. இந்த உண்மையை கோவை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும்” என்று அவர் கூறினார்.
பிரதமரிடம் கோவைக்கு தொடர்பான பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளோம் என்றார்.



Leave a Reply