கோவை வந்த பிரதமர் நரேந்திர மோடி – வரவேற்பு அளித்த தலைவர்கள்

Spread the love
பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை கோவைக்கு வந்து இயற்கை வேளாண் மாநாட்டை தொடக்கி வைத்தார். கோவை விமான நிலையத்தில் அவர் வருகை தந்தபோது, ஆளுநர் ஆர்.என். ரவி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மாநில தகவல்–மக்கள் தொடர்பு துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமாகா தலைவர் ஜி.கே. வாசன், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன்  உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர்.

பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.