கோவையில் ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல், ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வை ரத்து செய்தல், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புதல், ஊதிய முரண்பாடுகள் நீக்கம் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
நான்கு ஆண்டுகளுக்கு மேலாக 10 அம்ச கோரிக்கைகளை விளக்கி பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறோம். எதிர்க்கட்சியாக இருந்தபோது முதல்வர் வாக்குறுதி அளித்தும், ஆட்சிக்கு வந்தபின் நான்கரை ஆண்டாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றனர். கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்; இல்லையெனில் தொடர்ந்தும் போராட்டங்கள் நடத்தப்படும் என்று ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் எச்சரித்துள்ளனர்.



Leave a Reply