செட்டிப்பாளையத்தில் உள்ள கரி மோட்டார் ஸ்பீட்வேயில் தேசிய அளவிலான கார் பந்தயம் இரு நாட்கள் சிறப்பாக நடைபெற்றது. தமிழகம், கர்நாடகா, டெல்லி, மராட்டியம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து பல்வேறு வீரர்கள் இதில் பங்கேற்றனர்.
மிக முக்கியமான LPG பார்முலா–4 போட்டியில், பெங்களூரைச் சேர்ந்த துருவ் கோஸ்சுவாமி 19 நிமிடம் 58 விநாடிகளில் இலக்கை எட்டிச் சாதனை வெற்றி பெற்றார். ருகன் ஆல்வா இரண்டாம் இடமும், தில்ஜித் மூன்றாம் இடமும் பெற்றனர்.
நோவிஸ் கோப்பை போட்டியில் புவன் பானு முதலிடம் பிடித்தார். பொள்ளாச்சியைச் சேர்ந்த லோகித்லிங்கேஷ் ரவி இரண்டாம் இடம், அபிஜித் மூன்றாம் இடம் பெற்றனர்.
காண்டினென்டல் GT கோப்பையில் ஜார்கிங் வர்ஷா முதலிடமும், பிராயன் நிகோலஸ் இரண்டாம் இடமும், சரண்குமார் மூன்றாம் இடமும் பெற்றனர்.
போட்டிக்குப் பின்னர் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் சாகச நிகழ்ச்சியும் பார்வையாளர்களை கவர்ந்தது. நிகழ்வை ஏராளமான பொதுமக்கள் திரளாக கண்டு ரசித்தனர்.



Leave a Reply