தலைநகர் டெல்லியில் கடந்த 11ம் தேதி இரவு நடந்த வெடிகுண்டு சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் ஹரியானா மாநிலம் பரிதாபாத்திலுள்ள அல் ஃபாலா மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் உமர் முகமதுவுக்கு தொடர்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவரைப் போன்றவர்களை ஒயிட் காலர் தீவிரவாதிகள் என்று போலீசார் வகைப்படுத்தியுள்ளனர். டாக்டர் உமரைப் போலவே ஏராளமான ஒயிட் காலர் பணியில் இருப்பவர்கள் பரவலாக வட இந்தியா முழுவதுமே தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது . உமர் பயன்படுத்திய ஐ 20 காரும் பலரிடத்தில் கைமாறியது தெரிய வந்துள்ளது. ஆர்.டி.எக்ஸ்சுடன் சேர்ந்து அமோனியம் நைட்ரேட் fuel oil – லுடன் சேர்த்த வெடிபொருளை உமர் தயாரித்துள்ளார். அமோனியம் நைட்ரேட் என்பது உரங்கள் தயாரிக்கப் பயன்படும் ஒரு ரசாயனம். இது சாதாரண நிலையில் வெடிக்காது.
எனினும், பெட்ரோலில் இருந்து தயாரிக்கப்படும் fuel oil- என்பதைப் பயன்படுத்தி இதனை வெடிபொருளாக மாற்ற முடியும். இதைத்தான், அமோனியம் நைட்ரேட் எரிபொருள்-எண்ணெய் ( ANFO) என்கிறார்கள். பாறைகளை உடைக்க இந்த வகை முறையைப் பயன்படுத்துவார்கள்.
முன்னதாக, பரீதாபாத்தில் டாக்டர் அதீர் அகமது, டாக்டர் முஜ்ஜமீல் அகமது ஆகியோரிடத்தில் இருந்து 380 கிலோ அமோனியம் நைட்ரேட் பறிமுதல் செய்யப்பட்டது. பிற இடங்களையும் சேர்த்து மொத்தம் 2,900 கிலோ அமோனியம் நைட்ரேட் கைப்பற்றப்பட்ட சில மணி நேரத்தில் இந்தக் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இவர்கள் இருவரும் டாக்டர் உமர் முகமது பணியாற்றிய அதே அல் ஃபாலா மருத்துவமனையில்தான் டாக்டர்களாகப் பணியாற்றி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது , கூட்டாளிகள் இருவரும் பிடிபட்டதையடுத்து, பரீதாபாத்தில் இருந்து தப்பிய உமர், தில்லிக்கு வந்து இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. முதலில், அதிக மக்கள் நெருக்கம் நிறைந்த சந்தைப் பகுதியான சாந்தினி சவுக்கில் காரை வெடிக்க வைத்து ஏராளமான மக்களைக் கொல்ல வேண்டுமென்பதுதான் உமரின் நோக்கமாக இருந்துள்ளது. ஆனால், பாதுகாப்புக் காரணமாக அவரால் அங்குப் போக முடியவில்லை. தொடர்ந்து, செங்கோட்டை அருகே குண்டு வெடிப்பை நிகழ்த்தியதாகத் தெரிகிறது.
தீவிரவாதிகள் என்றால் காடு, மலைக்குள் கையில் துப்பாக்கியுடன்தான் இருக்க வேண்டுமென்பது இல்லை. தற்போது, தீவிரவாதம் ஒயிட் காலர் ஜாப்பில் இருப்பவர்கள் கைக்கு மாறியுள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 3 பேருமே டாக்டர்கள். மூவருமே ஜெய்ஷ் இ முகமது அமைப்புடன் தொடர்பில் இருந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பரீதாபாத்தில் மற்ற இருவர் பிடிபட்டு விட, தில்லியில் குண்டு வெடிப்பை நிகழ்த்தியதாகக் கருதப்படும் டாக்டர் உமர் முகமது மட்டும் இன்னும் பிடிபடவில்லை. இவர்கள் தவிர, லக்னோவைச் சேர்ந்த பெண் டாக்டர் ஷாகீன் ஷாகீத் என்பவரும் பிடிபட்டுள்ளார். மக்களின் உயிரைக் காக்கும் உயரிய பணியில் அர்ப்பணித்துக் கொண்டவர்கள். ஆனால், இவர்களே தற்போது கொத்துக் கொத்தாக மக்களைக் கொல்லத் துணிந்திருப்பதுதான் கடும் அதிர்ச்சியை மக்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஜெய்ஷ் இ முகமது அமைப்பு இந்தியாவில் இயங்கி வரும் மைனாரிட்டி கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவர்களை மூளைச் சலவை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
லக்னோவில் பிடிபட்ட பெண் டாக்டர் ஷாகீன் ஷாகீத் இந்தியாவில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் பெண்கள் பிரிவை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் பெயர் amaat ul-Mominaat என்பதாகும். ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சகோதரி சைதியா அசார்தான் பெண்கள் பிரிவுக்குத் தலைவராவார். இவரது கணவர் யூசப் அசார், கந்தகார் விமானக் கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்டவர். கடந்த மே 7ஆம் தேதி பாகிஸ்தானில் பகவல்பூரில் உள்ள ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைமையகம் மீது இந்தியா நடத்திய விமானத் தாக்குதலில் யூசப் அசார் கொல்லப்பட்டு விட்டார் . இதையடுத்து, இந்தியாவைப் பழிவாங்க வேண்டுமென்கிற வேட்கையில், ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் பெண்கள் பிரிவைத் தொடங்கி அதற்கு சைதியாவைத் தலைவராக்கியுள்ளார் மசூத் அசார். கடந்த அக்டோபர் மாதம் முதல் இந்த அமைப்பு செயல்படத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் அதற்கு நல்ல தலைமையைத் தேடி வந்த நிலையில், டாக்டர் உமர் முகமதுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த டாக்டர் ஷாகீன் ஷாகீத் ஜெய்ஷ் இ முகமது தலைமைக்கு அறிமுகமாக…



Leave a Reply