“SIR என்பது தேர்தல் ஆணையம் ஒவ்வொரு தேர்தலுக்கும் முன்னர் நடத்த வேண்டிய கட்டாய நடைமுறை. இது அரசியலமைப்பில் உள்ள செயல்முறை. திமுக இதற்கு முன்பு காங்கிரஸ் கூட்டணியில் இருந்தபோது SIR நடத்தப்பட்டது. அப்போது ஏன் எதிர்க்கவில்லை? இப்போது மட்டுமே பிரச்சினை எனக் கூறுவது அரசியல் நாடகம்,” என அவர் கூறினார்.
மேலும், திமுக அரசு தங்களின் ஆட்சிப் தோல்விகளை மறைக்க இந்த விவகாரத்தை பயன்படுத்தி வருவதாகவும் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டினார்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ குறித்து பதிலளித்த அவர்,
“ஸ்டாலின் மக்களின் வாக்குரிமை பறிக்கப்படுகிறது என்கிறார். ஆனால் SIR என்பது வாக்காளர் பட்டியலை சீரமைக்கும் சட்டப்படி உள்ள நடைமுறை. இதன் அர்த்தமே அவர்களுக்கு புரியவில்லை,” என விமர்சித்தார்.
கோலத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 4,379 போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டதாகவும், ஒரே முகவரியில் பல வாக்காளர் அட்டைகள் உள்ளன என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
“இந்த போலி வாக்குகள் மூலம் நீங்கள் வெற்றி பெற்றீர்களா?” என அவர் கேள்வி எழுப்பினார்.
தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்திற்கு திமுக-கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பது, அரசியலமைப்பு அமைப்புகளின் நம்பகத்தன்மையை சீர்குலைக்கும் முயற்சி என்று அவர் கூறினார்.
டெல்லியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது என்றும், வாக்காளர் திருத்த நடவடிக்கைகளில் வீடு தோறும் B.L.O. அதிகாரிகள் வருவார்கள், மக்கள் அலைய தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.



Leave a Reply