ஸ்ரீ இராமகிருஷ்ணா இயன்முறை மருத்துவக் கல்லூரியின்  பட்டமளிப்பு விழா

Spread the love

ஸ்ரீ இராமகிருஷ்ணா இயன்முறை மருத்துவக் கல்லூரியின் பெரிதும் எதிர்பார் க்கப்பட்ட 33வது இளங்கலை பிசியோதெரபி (BPT) மற்றும் 25வது முதுகலை பிசியோதெரபி (MPT) பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
தலைமை விருந்தினரான டாக்டர். கேஎம். அண்ணாமலை, MPT, Ph,D, ஊக்கமளிக்கும் வார்த்தைகளால் விழா மேலும் சிறப்பு பெற்றது. டாக்டர். அண்ணாமலை இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய கூட்டு சுகாதாரப் பணிகள் ஆணையத்தின் தலைவர் பொறுப்பையும், கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள காந்தி கிராமிய நிறுவனத்தின் வேந்தர் பொறுப்பையும் வகிக்கிறார்.
டாக்டர். அண்ணாமலை பட்டதாரிகளுக்குச் சான்றிதழ்களை வழங்கி, பட்டமளிப்புச் சிறப்புரை ஆற்றினார். அவர் பிசியோ தெரபியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து பட்டமளிப்பு உரையை நிகழ்த்தினார்.
கோவை எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர். சுந்தர் விழாவிற்குத் தலைமை தாங்கினார். ஸ்ரீ இராமகிருஷ்ணா பிசியோதெரபி கல்லூரியின் முதல்வர், வி.எஸ். சீதாராமன் வரவேற்புரையாற்றி, கோவை எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் வாழ்த்தி வரவேற்றார்.
விழாவின் மைய நோக்கமாக 49 இளங்கலை மற்றும் 29 முதுகலை இயன்முறை மருத்துவ பட்டதாரிகளுக்கு பட்டசான்றிதழ்கள் , 52 கல்விசார் சிறப்பு விருதுகளும், சிறந்த வெளிச்செல்லும் மாணவர்களுக்கான தங்கப்பதக்ககமும், சான்றிதழ்களும் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளை நிர்வாகம் சார்பாக வழங்கப்பட்டது.