எம்.எஸ். தோனி ஓய்வு பெறவில்லை — 2026 ஐபிஎல்-ல் விளையாடுவார் என சி.எஸ்.கே. CEO உறுதி!

Spread the love

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 2020 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்ற பிறகும், இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார் முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ். தோனி.

அவர் இல்லாமல் சி.எஸ்.கே. அணியை ரசிகர்கள் கற்பனை செய்ய முடியாது என்ற அளவிற்கு, தோனி அந்த அணியின் அடையாளமாக இருந்து வருகிறார். இருப்பினும் சமீபத்தில், அவர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என்ற வதந்திகள் பரவின.

இந்நிலையில், சி.எஸ்.கே. அணியின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) காசி விஸ்வநாதன் வெளியிட்டுள்ள தகவல் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர் கூறியதாவது:
“எம்.எஸ். தோனி இன்னும் ஓய்வு பெறவில்லை. அவர் சி.எஸ்.கே. அணியுடன் தொடர்ச்சியாக இணைந்துள்ளார். 2026 ஐபிஎல் சீசனிலும் தோனி விளையாடுவார்,” என உறுதிப்படுத்தினார்.

இந்த அறிவிப்பு வெளியாகியவுடன், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.