பீகார் சட்டசபைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்காளர்கள் அதிக ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, வாக்காளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தனது எக்ஸ் தளப் பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், “பீகாரில் இன்று ஜனநாயகக் கொண்டாட்டத்தின் முதல் கட்டம் தொடங்கியுள்ளது. சட்டமன்றத் தேர்தலின் இந்தக் கட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் முழு உற்சாகத்துடன் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், முதல் முறையாக வாக்களிக்கும் எனது இளம் நண்பர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
பீகார் மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.



Leave a Reply