கோவை ஆர்.எஸ்.புரம் 71ஆவது வார்டில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டது!

Spread the love

கோவை ஆர்.எஸ்.புரம் மேற்குமண்டலத்திற்கு உட்பட்ட 71ஆவது வார்டு பகுதியில், தமிழ்நாடு அரசின் மக்கள் நலத் திட்டமான “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்கள் வழங்கிய மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணும் நோக்கில், அரசு துறைகளின் அலுவலர்கள் நேரடியாக மக்களின் இல்லங்களுக்குச் சென்று மனுக்களை பெற்றனர்.

நிகழ்ச்சியில் கோவை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தொண்டாமுத்தூர் திரு. ரவி, பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான திரு. கார்த்திக் செல்வராஜ், மற்றும் மேற்குமண்டல தலைவர் திருமதி தெய்வாணை அவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

உதவி ஆணையாளர் திரு துரைமுருகன், மேற்குமண்டல அலுவலர்கள், மற்றும் பல துறை அரசு அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கோவை மாநகராட்சி 71ஆவது வார்டு மாமன்ற உறுப்பினரும், மாநகராட்சி காங்கிரஸ் குழு தலைவருமான டாக்டர் அழகு ஜெயபாலன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.

அத்துடன் தி.மு.க. சார்பில் வார்டு தலைவர் C.T.D. பாபு, சிவகுமார், ஜெயபிரகாஷ், நைனார், மற்றும் காங்கிரஸ் கட்சியின் V.G.P. நடராஜ், காட்டூர் சோமு, பாசமலர் சண்முகம், பாலுயாதவ், ரங்கராஜ், ஆட்டோ லோகு, T.G.S. பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்வில் திரளான பொதுமக்களும் பங்கேற்று தங்கள் மனுக்களை அளித்தனர்.

இந்த நிகழ்வு மூலம், மக்கள் நலனில் உறுதியாக செயல்படும் தமிழக அரசின் பணி மீண்டும் வெளிப்படுத்தப்பட்டது.