திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தை முன்னிட்டு, பக்தர்கள் கிரிவலம் செல்லும் உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஐப்பசி மாத பவுர்ணமி வருகிற நவம்பர் 4 ஆம் தேதி இரவு 9.43 மணிக்கு தொடங்கி, நவம்பர் 5 ஆம் தேதி இரவு 7.27 மணிக்கு நிறைவு பெறுகிறது.
இந்த நேரப் பகுதியில் பக்தர்கள் 14 கிலோமீட்டர் தூரம் கொண்ட அண்ணாமலையைக் கிரிவலம் செய்து, மலையே சிவனாக வணங்கலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், கிரிவலப்பாதையில் விபூதி பூசி, பொட்டு வைத்து ஆசீர்வாதம் செய்வதாக கூறி பணம் பறிக்கும் ஏமாற்று கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பக்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலத்தில் ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் நிலையில், காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.



Leave a Reply