இந்திரா காந்தி நினைவு தினம் – நினைவிடத்தில் சோனியா, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் அஞ்சலி!

Spread the love

இந்தியாவின் முதல் பெண் பிரதமராக இருந்த இந்திரா காந்தி, 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி தன் பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இன்று (அக்டோபர் 31) அவரின் 41-வது நினைவு நாள் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி நினைவிடத்தில், காங்கிரஸ் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதில் காங்கிரஸ் பாராளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில் பல்வேறு காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவுகளை நினைவுகூர்ந்தனர்.

அவரது நாட்டுப்பற்று, உறுதியான தலைவர் தன்மை, மற்றும் சமூகநீதிக்கான போராட்டம் இன்னும் பல தலைமுறைகளுக்கும் வழிகாட்டியாக உள்ளது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.