“திமுகவை பற்றி பிரதமர் மோடி கூறியது முழுக்க உண்மை” – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Spread the love

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்ததாவது:
உழைக்கும் பீகார் மக்களை திமுகவினர் துன்புறுத்துகின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியது முழுக்க முழுக்க உண்மை என்றும், திமுகவின் ஊழல், போலி முகம் ஆகியவை வெளிப்படும் போதெல்லாம் மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துவது திமுகவின் வழக்கமாகி விட்டது என்றும் கூறியுள்ளார்.

அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,
“நகராட்சி நிர்வாகத் துறையில் ₹888 கோடி ஊழல் வெளிப்பட்டவுடன் அதனை மறைக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முயற்சி செய்கிறார். திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் பீகார் மக்களை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளனர். இதனை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “பிரதமர் மோடி, தமிழகத்தில் பீகார் மக்களை திமுகவினர் துன்புறுத்துகின்றனர் என்று கூறியதே உண்மை. அதை திமுகவினர் தமிழக மக்களை குறித்ததாக மாறுபடுத்துவது தவறு. தாத்தா காலத்தில் தொடங்கிய இந்த அற்ப அரசியலை பேரன் காலத்திலும் தொடர்வதை முதலமைச்சர் நிறுத்த வேண்டும்,” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.